இந்த கிராமத்தில் பிறந்த அனைவரின் பிறந்த தேதியும் ஜனவரி 1. எப்படி தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடுவது என்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். ஆனால் ஒரு கிராமத்தில் ஒட்டுமொத்த மக்களின் பிறந்த நாள் ஜனவரி 1 என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா? ஆம், இந்திய குடிமகனின் ஆதாரம் என்று அழைக்கப்படும் ஆதார் அட்டை அப்படித்தான் கூறுகின்றது.
அலகாபாத் அருகில் உள்ள கான்ஜாசா என்ற கிராமத்தில் உள்ள பள்ளி குழந்தைகளின் ஆதார் அட்டை சமீபத்தில் சரிபார்க்கப்பட்டது. அப்போதுதான் பள்ளிக்குழந்தைகள் அனைவரது பிறந்த தேதியும் ஜனவரி 1 என்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த கிராமத்தில் உள்ள மற்ற நபர்களது ஆதார் அட்டையை சரிபார்த்தபோது, அந்த கிராமத்தில் உள்ள அனைவரின் பிறந்த தேதியும் ஜனவரி 1 என்றே இருந்துள்ளது.
கம்ப்யூட்டர் குளறுபடி காரணமாக இந்த தவறு நடந்துள்ளதாகவும், உடனடியாக இந்த தவறு, சரிசெய்யப்பட்டு அனைத்து மக்களின் உண்மையான பிறந்த தேதியுடன் கூடிய புதிய ஆதார் அட்டை விரைவில் வழங்கப்படும் என்றும் ஆதார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout