2020 இல் இன்னொரு அதிசயம்… 800 ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் Christmas star!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
2020 இல் அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் அளவே இல்லை எனும் அளவிற்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 800 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வரும் டிசம்பர் 21 ஆம் தேதி மாலை Christmas star வரப்போகிறது என்று ஒரு அதிசய நிகழ்வை பற்றி விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
அதாவது சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய இரண்டு கோள்கள் மிக நெருக்கமாக 800 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொள்ள இருக்கின்றன. அப்படி சந்தித்துக் கொள்ளும்போது வானில் இரட்டை நட்சத்திரங்கள் ஒட்டிக் கொண்டிருப்பது போல ஒரு அதிசயம் நடக்கும். இந்த அதிசய நிகழ்வைத்தான் Christmas star அல்லது பெத்லகேமின் நட்சத்திரம் என்று அழைக்கின்றனர்.
பொதுவாக சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி எனும் இரண்டு கோள்களும் ஒவ்வொரு 19 அல்லது 20 வருடங்களுக்கு ஒரு முறை கிரேட் கான்பூஸ்ஷன் எனும் பெயரில் அருகருகே சந்தித்துக் கொள்கின்றன. ஆனால் இப்படி நடக்கும் சந்திப்பு அருகருகே நிகழ்ந்தாலும் வரும் 21 ஆம் தேதி நடக்க இருக்கும் சத்திப்பை போல நெருக்கமாக இருக்காது என்றே விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அதாவது நிலவு விட்டத்தின் ஒரு பகுதியை விட இரு கோள்களுக்கும் இடையில் குறைந்த இடைவெளியில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி சந்தித்துக் கொள்ள இருக்கின்றன.
வியாழன், சனி எனும் இரண்டு கோள்களும் தங்களுடைய சுழற்சியின்போது ஒவ்வொரு 20 வருடங்களுக்கு ஒருமுறை அருகருகே வந்து செல்கிறது. ஆனால் கடந்த டிசம்பர் 4, 1226 ஆம் ஆண்டின் போது நிகழ்ந்த சந்திப்பில் மிகவும் குறுகிய இடைவெளியே இருந்தது. இதனால் வானில் 2 நட்சத்திரங்கள் ஒட்டிக் கொண்டிருப்பது போல காட்சி தென்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படி ஒரு அதிசய காட்சியானது வரும் டிசம்பர் 21 ஆம் தேதி மாலை நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வைப் பார்ப்பதற்கு உலகின் பல விஞ்ஞானிகள் காத்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பூமத்திய ரேகைக்கு அருகில் நிகழ இருக்கும் இந்த நிகழ்வை வரும் டிசம்பர் 21 ஆம் தேதி மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின் அடுத்த 45 நிமிடங்களில் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். விண்வெளியில் நடக்கும் இந்த இரட்டை நட்சத்திரக் காட்சியை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வு அடுத்த 2080 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி நிகழும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com