இந்தியாவுல இந்த 8 மாநிலங்களும் ரொம்ப மோசம்… அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மத்திய அரசு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 90 விழுக்காடு பாதிப்பு வெறுமனே 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, உத்திரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவின் 90 விழுக்காடு கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். அதிலும் 49 மாவட்டங்களில் 80 விழுக்காடு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
அதைத்தவிர மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, உத்திரபிரதேசம், குஜராத், மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் குறைந்தது 86 விழுக்காடு கொரோனா நோயாளிகள் இருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் நடக்கும் 80 விழுக்காடு உயிரிழப்புகள் வெறுமனே 32 மாவட்டங்களில் இருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. ஆனால் சர்வதேச சராசரியைப் பொறுத்த அளவில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மிகவும் குறைவு எனவும் மத்திய அரசு தகவல் வெளியிட்டு இருக்கிறது.
சர்வதேச சராசரியில் 10 லட்சம் பேரில் 1,453 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்த வரை 10 லட்சம் பேரில் 538 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் 10 லட்சம் பேரில் வெறுமனே 15 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகிறது. இதனால் இந்தியாவில் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்ததில் இருந்தே தேவையான அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை 21.3 லட்சம் பேருக்கு N95 மாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் 1.2 கோடி பேருக்கு PPT உடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 6.17 கோடி பேருக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற தடுப்பு மருந்துகள் கொடுக்கப் பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 7.67 லட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் உயிரிழப்புகள் 21,129 ஆக பதிவாகி இருப்பதாகவும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments