தூத்துகுடி செய்தியை ஒளிபரப்பிய அல் ஜசீரா தொலைக்காட்சி
- IndiaGlitz, [Thursday,May 24 2018]
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தூத்துகுடி மக்களின் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100 நாட்கள் போராட்டத்தை வட இந்திய ஊடகங்களே இதுவரை கண்டுகொள்ளமல் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஒட்டுமொத்த இந்திய மீடியாக்கள் தூத்துகுடியை திரும்பி பார்த்துள்ளன. அதற்கு காரணம் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள்
இந்த நிலையில் தற்போது சர்வதேச ஊடகங்களும் இந்த பிரச்சனை குறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக கட்டார் நாட்டின் அல் ஜசீரா தொலைக்காட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த போராட்டம் குறித்த வீடியோவை செய்தியாக பதிவு செய்துள்ளது.
அதில் தூத்துகுடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் 100 போராட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக எந்தவித ஆயுதங்களும் இல்லாத பொதுமக்களை காவல்துறையினர் துப்பாக்கியால சுட்டதாகவும் இதனால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாநில அரசு தற்காலிகமாக இந்த ஆலையை மூட நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், ஆனால் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே இந்த மக்களின் கோரிக்கையாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.