'பிளாக்பஸ்டர் மாஸ்டர்': அஜித் ரசிகையின் டுவீட் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் ரிலீஸான 16 நாட்களில் ஓடிடியிலும் ரிலீசாகி சக்கைபோடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆனதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் தீவிர ரசிகைகளில் ஒருவரான பிரபல மோட்டார் பைக் வீராங்கனை அலிஷா அப்துல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் ’மாஸ்டர்’ படத்தின் 50 நாள் குறித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.
’மாஸ்டர்’ படத்தை மாஸ் என்றும் ’மாஸ்டர் பிளாக்பஸ்டர் 50 நாட்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ள அலிஷா, தளபதி விஜய் மாஸ் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம்? என்று அவர் தெரிவித்துள்ளார். அலிஷாவின் இந்த டுவீட்டிற்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#mass #MASTERBlockBuster50Days @actorvijay class always at its best.. here is an example ???? pic.twitter.com/zzyQRXWVdX
— Alisha abdullah (@alishaabdullah) March 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com