'பிகில்' டிரைலரை பாராட்டிய பிரபல வீராங்கனை
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரகுமானின் இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது
ரூ.180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களும் இந்த படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் அதிக லைக்ஸ்களை பெற்று சாதனை புரிந்தது. இந்த படத்தின் டிரைலரை கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரை பார்த்த பிரபல கார் ரேசிங் வீராங்கனை அலிஷா அப்துல்லா தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டி உள்ளார்
பிகில் படத்தின் டிரைலரை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். என்ன ஒரு பவர்ஃபுல் ட்ரைலர்! அட்லி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். ஒரு ஆச்சரியமான படைப்பை அனைவரும் சேர்ந்து உருவாக்கி உள்ளீர்கள். விஜய்யை திரையில் பார்க்க நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்’ என்று அலிஷா அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்
Watched the trailer of #bigil #BIGILMostLikedIndianTrailer
— Alisha abdullah (@alishaabdullah) October 17, 2019
It gave me goosebumps... what a powerful impact through a trailer.. all the very best @Atlee_dir you have done an amazing job.. I can’t wait for the movie ⏱⏱ @actorvijay
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments