இந்தியாவின் முதல் பெண் ரேஸ் சாம்பியனுக்கு புதிய பதவி
- IndiaGlitz, [Monday,May 25 2020]
இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லாவுக்கு தமிழகத்தில் ஒரு உயர்ந்த பதவியை NHRACACB என்ற அமைப்பு அளித்துள்ளது. இந்த தகவலை அலிஷா அப்துலா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அலிஷா அப்துல்லா கூறியபோது, ‘இந்த அருமையான சந்தர்ப்பத்தில் நான் ஒரு விஷயத்தை அறிவிக்க விரும்புகிறேன். NHRACACB என்ற தேசிய மனித உரிமைகள் மற்றும் குற்ற எதிர்ப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் என்ற அமைப்பு என்னை தமிழக மாநிலத்தின் தலைவராக தேர்வு செய்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
பெண் பைக் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லா அவர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த அதர்வா நடித்த ‘இரும்பு குதிரைகள்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
On this special occasion I’d like to announce that
— Alisha abdullah (@alishaabdullah) May 24, 2020
NHRACACB (National Human Rights & Anti crime &Anti corruption bureau New Delhi) have elected me as the “President of Tamil Nadu state” ?????? #Alishaabdullah #anticrime #rights #newdelhi #India #chennai #justice @nhracacb pic.twitter.com/hIZEdVLyqA