பைலட்டை திருமணம் செய்யும் பிரபல நடிகை
- IndiaGlitz, [Wednesday,May 25 2016]
இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் சாம்பியனும் பிரபல நடிகையுமான அலிஷா அப்துல்லா, தற்போது விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அலிஷா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அறிவித்த நிலையில் தற்போது தன்னுடைய திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறவுள்ளதாகவும், அவருடைய வருங்கால கணவர் ஒரு பைலட் என்பதையும் தெரிவித்துள்ளார்.
தற்போது அலிஷாவும் அவருடைய குடும்பத்தினர்களும் திருமண நிச்சயதார்த்த பணியில் இருப்பதாகவும் விரைவில் இந்த தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அலிஷா ஏற்கனவே அதர்வா நடித்த 'இரும்புக்குதிரை' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.