பிரபலத் தொழில் அதிபர் ஜாக் மா காணவில்லையா??? பரபரப்பு தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபலத் தொழில் அதிபரும், அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா காணாமல் போய்விட்டார் என்ற பரபரப்பு தகவலை தற்போது ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இவர் தெற்காசியாவின் முதல் பணக்காரர் மற்றும் உலகப் பணக்காரர் வரிசையில் முன்னணியில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இவர் சீன அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துப் பதிவு செய்து இருந்தார். அதனால் அவர் தொழில் ரீதியாக அச்சுறுத்தப்பட்டார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. கடந்த 2 மாதங்களாக அவர் பொதுவெளிக்கு வரவேயில்லை. அதனால் அவருக்கு அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல்கள் இருந்திருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா தாக்கம் காரணமாக சீனாவில் தொழில் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாட்டு விதிகள் கொண்டு வரப்பட்டன. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடும் நட்டத்தைச் சந்திக்க வேண்டி வந்தது. இந்நிலையில் கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் பழமைவாதிகள். அரசாங்கம் காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்று ஜாக் மா கருத்து வெளியிட்டு இருந்தார். இந்த கருத்து சீன அரசாங்கத்திற்கு கடும் எரிச்சலை உண்டாக்கியதாகவும் அதனால் தொழில் ரீதியான நெருக்கடி கொடுக்கப்பட்டு அலிபாபா நிறுவனத்தின் மீது விசாரணை தொடரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணையில் அவரின் ஐ.பி.ஓ நிறுவனம் முடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்துவரும் ஜாக் மா கடந்த 2 மாதத்திற்கு முன்பு கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அலிபாபா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜாக் மாவிற்கு அச்சுறுத்தல்கள் இருந்திருக்கலாம். அதனால் பொது வெளிக்கு வருவதை ஜாக் மா தவிர்த்து இருக்கலாம் என்பது போன்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற ஒருவர் காணாமல் போய் இருப்பது உலகப் பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதனால் ஜாக் மா எங்கே என்பது போன்ற கேள்விகளை சமூக வலைத்தளங்களிலும் சிலர் தற்போது எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout