பாலிவுட் நட்சத்திர காதலர்கள்… பிறந்தநாளில் வைரலாகும் அழகிய புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் அசைக்க முடியாத பிரபலங்களாக ரன்பீர் கபூர்- ஆலியா பட் ஆகிய இருவரும் வலம்வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வருவதும் அவ்வபோது சுற்றுலாத் தளங்களுக்கு ஒன்றாகச் சென்றுவருவதும் ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் நேற்று ரன்பூர் கபூர் தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
ரன்பீர் கபூரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இந்தக் காதல் ஜோடி சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது காதலர் ரன்பீருக்கு ஆலியாபட் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் ஏரிக்கரையில் அமர்ந்து கொண்டு அஸ்தமனமாகும் சூரியனை மெய்மறந்து கண்டுகளிக்கும் வகையில் அந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.
“Happy Birthday My Life“ என்ற கேப்ஷனுடன் ஆலியா பட் பதிவிட்ட இந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஆலியா பட்- ரன்பீர் காதல் ஜோடியைப் பார்த்து பூரிப்பை வெளிப்படுத்திவரும் ரசிகர்கள் தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக வலம்வரும் இந்த காதல் ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து “Brahmastra“ என்ற திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ரன்பீர் பல முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களில் நடித்துக் கொண்டுவரும் நிலையில் ஆலியா தென்னிந்திய சினிமாவான “RRR“ திரைப்படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com