close
Choose your channels

சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட்… பிறந்த நாளன்று வெளியான வைரல் புகைப்படம்!

Monday, March 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

“பாகுபலி“ இயக்குநர் ராஜமௌலி பிரம்மாண்ட பொருட்செலவில் மீண்டும் ஆர்ஆர்ஆர் எனும் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இத்திரைப்படத்திற்காக சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்து இருக்கும் புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

அல்லுரி சிதாராம ராஜு, கொமரம் பீம் எனும் இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை ராஜமௌலி திரைப்படமாக உருவாக்கி வருகிறார். கடந்த 1920 ஆம் ஆண்டுகளில் நடப்பதாகக் காட்டப்படும் இத்திரைப்படத்தில் “சிதாராமாவாக“ ராம் சரணும், “கொமரம் பீம்மாக“ ஜுனியர் என்டிஆரும் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் பாலிவுட்டின் பிரபல நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா ஒலிவியா மொரிஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் 13 ஆம் தேதி இப்படம் வெளிவர உள்ள நிலையில் ஆலியா பட்டின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சீதா கதாபாத்திரத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இப்புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

மேலும் ஆலியாபட் நடிக்கும் முக்கிய பாலிவுட் திரைப்படமான “கங்குபாய் கத்தியவாடி” இன் ட்ரைலர் வரும் ஜுலை 30 ஆம் தேதி வெளிவர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆலியா பட்டிற்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment