ரன்பீருடன் திருமணம் முடிந்துவிட்டதே… ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்த ஆலியா பட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டின் நட்சத்திர நடிகர், நடிகையான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா இருவரும் காதல் ஜோடிகளாக வலம்வரும் தகவல் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஆலியா தனது திருமணம் குறித்து பேசியிருக்கும் கருத்து ரசிகர்களை நெகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2017இல் இயக்குநர் அயன் முகர்ஜியின் “பிரம்மாஸ்திரா“ திரைப்படத்தில் சந்தித்துக்கொண்ட நடிகை ஆலியா மற்றும் ரன்பீர் இருவரும் காதலில் விழுந்ததாகக் கூறப்பட்டது. ஆனாலும் ரகசியம் காத்துவந்த இந்த ஜோடி கடந்த 2018 இல் நடிகை சோனம் கபூரின் திருமணத்தின்போது தங்களது உறவை ஒப்புக்கொண்டனர். மேலும் திருமணம் குறித்து ரன்பீரிடம் கடந்த 2020இல் கேள்வி எழுப்பப்பட்டபோது கொரோனாவிடம் சிக்காமல் இருந்திருந்தால் எங்களது திருமணம் கோலாகலமாக முடிந்திருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றலா சென்றுவரும் இந்த ஜோடிகளைப் பார்க்கும் ரசிகர்கள் திருமணம் எப்போது கேள்வி எழுப்பிவருகின்றனர். தொலைக்காட்சி நேர்காணல்களில் அவ்வபோது இந்தக் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆலியாபட் தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்டதையடுத்து அவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு பதிலளித்த நடிகை ஆலியா பட், ஏற்கனவே ரன்பீர் கபூருடன் திருமணம் செய்துகொண்டதாக உணர்கிறேன் என நெகிழ்ச்சியுடம் பதிலளித்துள்ளார். மேலும் தங்களது திருமணத்தில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பது குறித்துப் பேசிய அவர் எல்லாவற்றுக்கும் ஒரு காரணமுண்டு. நாங்கள் எப்போது திருமணம் செய்கிறோமோ அது சரியாகவும் அழகாகவும் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ஆலியா பட் மனதளவில் ரன்பீரை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு விட்டேன் என்று கூறியிருக்கும் இந்தக் கருத்து தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments