பிரபல நடிகை அணியும் மாஸ்க்கின் விலை: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரத்தின் வாரிசாக இருந்தாலும் எப்போதும் எளிமையை விரும்புபவர் என்ற பெயரை பெற்றவர் நடிகை அலியா பட். ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளமாக பெற்ற போதிலும் இவர் வெளியே வரும் போது எளிமையாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஏற்கனவே பலமுறை ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
அந்த வகையில் இந்த கொரோனா காலத்தில் அவர் வெளியே வந்தபோது அணிந்த மாஸ்க்கின் விலையை அறிந்து ரசிகர்கள் மீண்டும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். சமீபத்தில் அவர் வெளியே வந்தபோது எளிமையான உடை, கையில் வாட்டர் பாட்டில் மற்றும் மாஸ்க், கிளவுஸ் அணிந்து இருந்தார். அவர் அணிந்திருந்த மாஸ்க் விலைதான் தற்போது பேசுபொருளாக உள்ளது
எளிமையின் உருவமாக இருக்கும் அலியாபட் வெறும் 333 ரூபாய் மட்டுமே உள்ள அடிடாஸ் பிராண்ட் மாஸ்க்கை அணிந்துள்ளார். அவருக்கு இருக்கும் வசதிக்கும் வருமானத்திற்கும் லட்சக்கணக்கில் செலவு செய்து மாஸ்க் அணியலாம். ஆனால் அவர் எளிமை மற்றும் பாதுகாப்பை கணக்கில் கொண்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்த ரூ.333 விலையில் உள்ள மாஸ்க்கை மட்டுமே அணிந்துள்ளதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
ஒரு சிலர் தங்களின் செல்வச் செழிப்பை வெளியே காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தங்கம், வெள்ளியில் ஆன மாஸ்க்குகளை அணிந்து கொண்டிருக்கும் நிலையில் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் அலியாபட் வெறும் 333 ரூபாய் மாஸ்க்கை அணிந்து சென்றதை அறிந்து அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்
மாஸ்க் அணிவது என்பது தங்களுடைய வசதியை வெளிக்காட்டுவதற்கோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அல்ல என்றும் பாதுகாப்பு காரணத்துக்காகவே மாஸ்க் அணிய வேண்டும் என்று அலியாபட் வலியுறுத்தியதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் இணையதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com