நேற்று சமத்துப் பொண்ணு… ஆனால் இன்று… வைரலாகும் ஆலியா பட்டின் க்யூட் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் நேற்று தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த புகைப்படத்தில் ஆலியா சமத்துப் பெண்ணாக பீச்சில் அமர்ந்து இருந்தார். இதனால் ஆலியா பட்டின் குழந்தை வயது போட்டோவிற்கு நெட்டிசன்கள் பலரும் “இவ்ளோ க்யூட்டா” என வியப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஆனால் இன்று அவர் வெளியிட்டு உள்ள புகைப்படம் ஒன்றில் சிறிய குழந்தையாக இருக்கும் ஆலியா பட் பாதுகாப்பு உடையோடு நீச்சல் குளத்தில் கெத்து காட்டுகிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த ஒரு புகைப்படத்திற்கு மட்டும் 1 கோடி 41 லசட்த்தைத் தாண்டி லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்த “கங்குபாய் கத்தியவாடி” திரைப்படம் வரும் ஜுலை 30 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதோடு எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ஆலியா பட் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஆலியா பட், அவரது காதலர் நடிகர் ரன்பீர் கபூரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவு சென்று இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தான் தனது சிறுவயது புகைப்படத்துடன் மேட்ச் செய்து தற்போது தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout