வயிற்றில் தானாகவே உற்பத்தியாகும் மது: டாஸ்மாக் செலவு மிச்சமா?
- IndiaGlitz, [Friday,October 25 2019]
குடிப்பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் மதுவிற்காக தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்து கொண்டிருக்க்கும் நிலையில் 46 வயது நபர் ஒருவரின் வயிற்றில் தானாகவே மது உற்பத்தியாகி அவருடைய மதுச்செலவை மிச்சப்பட்டுத்தியுள்ளது
அமெரிக்காவில் 46 வயதுடைய நபர் ஒருவரின் வயிற்றில் தானாகவே மது உற்பத்தி ஆவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட இந்த நபரை சமீபத்தில் மருத்துவர்கள் ஆய்வு செய்தபோது அவர் ஒரு வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அவரது வயிற்றில் உள்ள ஈஸ்ட், அவர் சாப்பிடும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட்டை ஆல்கஹாலாக மாற்றுவதையும் கண்டறிந்தனர்.
இதனையடுத்து அவர் எப்போதுமே போதையுடன் இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது