மது பழக்கத்தால் ஒரே ஆண்டில் 8 லட்சம் பேருக்குப் புற்றுநோய்? பகீர் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தி இருந்தன. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மது பழக்கத்தால் 7 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகப் பிரபல அறிவியல் ஆய்விதழான The Lancet Oncology தெரிவித்து இருக்கிறது.
உலகில் கோடிக்கணக்கான பேருக்கு மது பழக்கத்தால் தினம்தோறும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த (2020) ஆண்டில் மட்டும் 7,40,000 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகப் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. அதிலும் பெண்களைவிட ஆண்களுக்கு மது பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பின் அளவு கிட்டத்தட்ட 76.7%ஆக இருப்பதும் தெரியவந்துள்ளது.
பொதுவாக புற்றுநோய் என்பது மரபியல் காரணங்களாலும் புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி இல்லாமல் எடை அதிகமாக இருத்தல் போன்ற காரணங்களால் வருகிறது. அந்த அடிப்படையில் புற்றுநோய் தாக்கத்திற்கு மது பழக்கம் ஒரு முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 193 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் 7 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு ஏற்பட்ட புற்றுநோய் தாக்கம் மதுப்பழக்கத்தால் ஏற்பட்டது என்றும் தெரிவித்து உள்ளனர்.
மேலும் மதுபழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் அளவில் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் உணவுக்குழாய் புற்றுநோய் 1.9 லட்சம் பேருக்கும் கல்லீரல் புற்றுநோய் 1.5 லட்சம் பேருக்கும் மார்பகப் புற்றுநோய் 98,300 பேருக்கும் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மது பிரியங்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments