அம்மா போல் கொள்ளை அழகு.. சினிமாவுக்கு வரும் 'ஆளவந்தான்' நடிகையின் 18 வயது மகள்..!

  • IndiaGlitz, [Thursday,April 06 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ என்ற திரைப்படம் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்த நடிகையின் 18 வயது மகள் விரைவில் சினிமாவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

அர்ஜுன் நடித்த ’சாது’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரவீனா டண்டன். இவர் கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் பல பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் நடிகை ரவீனா டண்டன் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் கையால் பத்மஸ்ரீ விருதை பெற்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது



இந்த நிலையில் நடிகர் ரவீனாவின் மகள் ரஷா ததானி விரைவில் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருப்பதாகவும் அர்ஜுன் கபூர் இயக்கும் திரைப்படத்தில் அவர்தான் நாயகி என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு ஜோடியாக நடிப்பது ஒரு திரையுலக பிரபலத்தின் வாரிசு என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



இந்த நிலையில் ரஷா ததானி தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.