'திருமணம்' குறித்து இயக்குனர் விஜய் வெளியிட்ட அறிக்கை இதோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் டாக்டர் ஐஸ்வர்யா அவர்களுக்கும் வரும் ஜூலை 11ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் தனது திருமணம் குறித்து இயக்குனர் ஏ.எல்.விஜய் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
அன்புக்குரிய பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும், நல்லுள்ளம் கொண்ட என நலன் விரும்பிகளுக்கும்
வாழ்க்கை பயணம் எப்போதுமே அனைவருக்கும் அதன் சொந்த வழியில் சிறப்பானது மற்றும் தனித்துவமானது. எல்லோருடைய வாழ்க்கையும் போலவே, என் வாழ்க்கையும் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி மற்றும் வலி ஆகியவற்றை உள்ளட்டக்கிய வெவ்வேறு கட்டங்களில் பயணித்து வந்துள்ளது. ஆனால் இதுபோன்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்தது பத்திரிகை மற்றும் ஊடகங்களும் அவர்களின் ஆதரவும் ஆகும். நான் அவர்களை 'நண்பர்கள்' என்று அழைக்க மாட்டேன். அவர்கள் எனது 'குடும்பம்'. அவர்கள் எனது உணர்வுகளை புரிந்து கொண்டு எனது தனியுரிமைக்கு மதிப்பளித்து, என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு இனிமையான அணுகுமுறையுடன் நடந்து கொண்டனர்.
தற்போது எனது நலம் விரும்பிகளுக்கு என் வாழ்வின் முக்கியமான துவக்கத்தை பற்றிய மகிழ்ச்சியான ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்கிறேன். எனது குடும்பத்தினர் என் வாழ்க்கை துணைவியாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளனர். டாக்டர் ஆர்.ஐஸ்வர்யாவுடன் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2019ல் முற்றிலும் ஒரு குடும்ப விழாவாக இந்த திருமண நிகழ்வு நடக்க இருக்கிறது. உங்கள் முழு அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் எனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன்
உங்கள் வாழ்த்துக்களுக்கும் மேலான ஆதரவுக்கும் நன்றி
இவ்வாறு இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments