2025ல் அவரை ஹீரோயின் ஆக்குவேன்.. குழந்தை நட்சத்திரம் குறித்து ஏ.எல். விஜய் பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் ஏஎல் விஜய், தனது படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவரை 2025 ஆம் ஆண்டு ஹீரோயின் ஆக்குவேன் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா ஷெட்டி நடித்த ’தெய்வத்திருமகள்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா.
இந்த படத்தை அடுத்து ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’சைவம்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் சாரா நடித்தார். அதன் பிறகு ’விழித்திரு’ ’சில்லு கருப்பட்டி’ போன்ற படங்களில் நடித்த சாரா ’பொன்னியின் செல்வன்’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் சிறு வயது நந்தினி கேரக்டரில் நடித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் விஜய், ‘குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைப்பது மிகவும் எளிது என்றும் அவர்கள் மூளை மிகக் கூர்மையாக இருக்கும் என்பதால் நாம் சொல்வதை அப்படியே புரிந்து கொண்டு இயல்பாக நடிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக சாரா நாம் சொல்வதை உடனே புரிந்து கொள்வார் என்றும் ’பொன்னியின் செல்வன் படத்தில் சாராவை தெய்வீக அழகுடன் மணிரத்னம் அவர்கள் சித்தரித்தார் என்றும் அவரை தைரியமாக நான் 2025 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் நாயகி ஆக்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout