தலைவியைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இணையும் முக்கிய பிரபலங்கள்!

  • IndiaGlitz, [Saturday,December 04 2021]

நடிகர் விஜய்சேதுபதி – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு கங்கனா ரனாவத் நடிப்பில் “தலைவி“ படத்தை விஜய் உருவாக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் புதிய படமொன்றை இவர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா கடந்த 2011 இல் “தாண்டவம்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக இவர் நடித்த “நிசப்தம்“ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியது. அதற்குப் பிறகு வேறெந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது அனுஷ்கா ரீஎண்ட்ரி கொடுக்கும் விதமாக நடிகர் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இருக்கும் இந்தப் புதிய படம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி “விடுதலை“, “யாரும் ஊரே யாவரும் கேளீர்“, “விக்ரம்“, “மைக்கேல்“ போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

மேலும் “காத்துவாக்குல ரெண்டு காதல்“, “கடைசி விவசாயி“ போன்ற ஒருசில திரைப்படங்கள் இந்த மாதம் ரிலீசாகவுள்ளது. அதேபோல இந்தியில் இவர் நடிகை காத்ரினா கைஃப்புடன் “மெர்ரி கிறிஸ்துமஸ்“ போன்ற ஒருசில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அனுஷ்கா ஷெட்டியுடன் முதல் முறையாக அவர் இணைந்து நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

காரை தள்ளுவதுபோல கையால் விமானத்தையே தள்ளிச்சென்ற சம்பவம்… வைரல் வீடியோ!

சாலையில் வாகனங்கள் பஞ்சராகி நின்றால் கையால் தள்ளுவதைப் பார்த்திருப்போம். ஆனால் ஓடுதளத்தில் டயர் பஞ்சராகி

'தளபதி விஜய்யின் வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்!

தளபதி விஜய் கதாநாயகனாக அறிமுகமான 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகியதை அடுத்து தளபதி விஜய்யின் 29 ஆண்டுகள் கொண்டாட்டத்தை அவரது ரசிகர்கள் சமூக

இவங்க ரெண்டு பேர் தொல்லை தாங்க முடியலை சார்: கமலிடம் கம்ப்ளெண்ட் செய்த ராஜூ!

தாமரை மற்றும் பிரியங்கா ஆகிய 2 பேர் தொல்லை தாங்க முடியவில்லை என்று கமல்ஹாசனிடம் ராஜூ கம்ப்ளெண்ட் செய்யும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் புதிய டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும்

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' டீசர் ரிலீஸ் எப்போது?

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி