83 வயதில் 29 வயது காதலி மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காட்ஃபாதர் திரைப்படத்தில் நடித்து உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஒருவர் 83 வயதில் 29 வயது காதலியோடு இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கிறார். இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
அமெரிக்கா திரைப்பட நடிகரான அல் பசீனோ ‘தி காட்ஃபாதர்’ திரைப்படத்தில் மைக்கேல் கோர்லியோனாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் ‘Scarface’, ‘Sea of love’, ‘City Hall’, ‘Hange Man” என்று பல ஹிட் படங்களில் நடித்து ஆஸ்கர் உள்ளிட்ட எம்மி விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். தற்போது 83 வயதாகும் இவர் தனது 29 வயது காதலி மூலம் 4 ஆவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக காட்ஃபாதர் திரைப்படத்தில் நடித்த மற்றொரு பிரபல நடிகர் ராபர்ட் டி நீரோ தனது சிறிய வயது காதலி டிபன் சென் மூலம் 7 ஆவது குழந்தையைப் பெற்றுக்கொண்ட தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது ‘காட்ஃபாதர் I, II, II‘ என்று அனைத்துப் பாகங்களிலும் நடித்து உலக பிரபலமாக இருந்துவரும் நடிகர் அல் பசீனோ பிறகு தனது காதலி மூலம் 4 ஆவது குழந்தையை வரவேற்க இருக்கிறார்.
முன்னதாக ஜான் டர்னட் என்பவரை திருமணம் செய்துகொண்ட அல் பசீனோவிற்கு ஜுலி பசீனோ (33), அடுத்து பெவர்லி ஏஞ்சலா மூலம் அன்டன் பசீனோ (22), ஒலிவியா பசீனோ (22) என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் அல் பசீனோவின் 22 வயதான காதலி நூல் அல்பல்லா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருப்பபதாகவும் விரைவில் இந்த ஜோடிக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்தத் தகவலையடுத்து ரசிகர்கள் பலரும் அல் பசீனோவிற்கு வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments