ஸ்ரீராமருக்கு 1000 கோயில்கள் இருக்கலாம், ஆனா சேது ஒண்ணு தான் இருக்குது:  'ராமர் பாலம்' டிரைலர்

  • IndiaGlitz, [Tuesday,October 11 2022]

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்த ’ராம் சேது’ என்ற பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு ‘ராமர் பாலம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் மேலும் மூன்று நிறுவனங்களுடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் 2 நிமிட ட்ரைலர் அசத்தலாக உள்ளது.

இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள ராமர் பாலம் என்று தமிழிலும் ஆடம் பிரிட்ஜ் என்று ஆங்கிலத்திலும் கூறப்படும் பாலம் இராமாயண புராண காலத்தில் இருந்தே புகழ்பெற்றது. இந்த பாலம் குறித்த உண்மைத் தன்மையை ஆராய செல்லும் ஒரு தொல் பொருள் ஆய்வாளரின் கதைதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

அக்ஷய்குமார், சத்யதேவ், ஜாக்குலின் பெர்னான்டஸ் ,நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இந்த படத்தை அபிஷேக் சர்மா இயக்கியுள்ளார். இந்த படம் அக்டோபர் 25ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் கொட்டப்போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த நான்கு நாட்களில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்சிதா .. பிரிந்து போன கணவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா குறித்து அவரை பிரிந்து வாழும் கணவரின் சமூக வலைதள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாத்ரூமுக்கு கூட ரெட் கார்ப்பெட்டா? ஜிபி முத்துவை அலேக்காக தூக்கிய போட்டியாளர்கள்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் நேற்றைய  முதல் நாள் கலகலப்பான சென்ற நிலையில் இன்று இரண்டாவது நாளும் அதே கலகலப்புடன் தொடங்குகிறது. 

நடிகர் விதார்த்தின் புதிய திரைப்படம்: சிங்கிள் பாடல் ரிலீஸ்!

 தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான விதார்த் நடிக்கும் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கேஎல் கண்ணன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் செவ்வந்தி மூவிஸ்

ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி: படப்பிடிப்பு நிறைவு

சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், ARK சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் 'வீரன்' படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.