யூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்ட ரஜினி பட நடிகர்!

  • IndiaGlitz, [Friday,November 20 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ’2.0’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் அக்ஷய்குமார் என்பது தெரிந்ததே. மேலும் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் இயக்கிய ’லட்சுமி’ படத்திலும் இவர் ஹீரோவாக நடித்திருந்தார்

இந்த நிலையில் அக்ஷய் குமார் பீகாரை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒருவரிடம் ரூபாய் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சுஷாந்த்சிங் கொலை வழக்கு குறித்து பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் தனது யூடியூப் சேனலில் ஆதாரம் இல்லாத செய்திகளை தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஷித் சித்திக் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார் என்றும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 500 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரி சட்ட நிபுணர்கள் மூலம் நடிகர் அக்‌ஷய்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்

மேலும் ரஷித் சித்திக் தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மூன்று நாட்களுக்குள் இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்ஷய் குமாரின் நோட்டீஸில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

ஏற்கனவே ரஷித் சித்திக் மீது மகாராஷ்டிரா மந்திரி ஒருவரை அவதூறாக பேசியதாக மும்பை போலீசார் வழக்கு செய்துள்ள நிலையில் தற்போது அக்ஷய் குமாரும் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் ஒருசிலர் தங்களது சேனல் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை கொண்ட வீடியோக்களை பதிவு செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜெயிலுக்கு போகும் பாலா-சுசி: ஒருமனதாக தேர்ந்தெடுத்த போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்க்கில் பாலா அணியினர் சரியாக விளையாடவில்லை என்பது ஏற்கனவே தெரிந்ததே. அவர்களது நேரம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் வித்தியாசம் இருந்தது

'வலிமை' படப்பிடிப்பின்போது அஜித்துக்கு விபத்தா?

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது என்பதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான்

பட்டாசு வெடிப்பது இந்து கலாச்சாரமே இல்ல… ஐபிஎஸ் அதிகாரியின் கருத்தால் வெடித்த சர்ச்சை!!!

தீபவாளி பண்டிகையின்போது கொரோனா பரவல், காற்று மாசுபாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து இருந்தன.

7.5% உள்இட ஒதுக்கீடு… முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் கனவு நனவான ஏழை மாணவர்கள் ஆனந்த கண்ணீர்!!!

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வினால் (நீட்) அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தமிழக அரசு

நான் என்றுமே உங்கள் விதைதான்: பிரபல இயக்குனருக்கு நன்றி கூறிய சூர்யா!

'சூரரைப்போற்று' படத்தில் சிறப்பாக நடித்த சூர்யாவுக்கு கடந்த சில நாட்களாக பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் சூர்யாவை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த்