பப்ஜி கேமுக்கு பதில் புதிய கேம்: தொடங்குகிறார் 'ரஜினி-ஷங்கர்' பட நடிகர்!

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் மாதம் லடாக் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த சம்பவத்தை அடுத்து சீனாவின் நூற்றுக்கணக்கான செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. சமீபத்தில் கூட பப்ஜி உள்பட 118 செயலிகள் தடை செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேமுக்கு பதிலாக புதிய அதிரடி கேம் ஒன்றைத் தொடங்குவதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அறிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ’2.0’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அக்ஷய்குமார் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிர்பர் என்ற இயக்கத்தின் கீழ் அச்சமற்ற மற்றும் யுனைடெட் கார்ட்ஸ் என்னும் FAU-G கேமை தொடங்க உள்ளேன். இந்த கேம் பொழுதுபோக்கு தவிர நமது ராணுவ வீரர்களின் தியாகங்களை பற்றியும் அறிந்து கொள்ள வழிவகுக்கும். இந்த கேமில் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதம் ’பாரத் கே வீர்’ என்ற அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியாவில் பப்ஜி கேம் தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த கேமிற்கு இணையாக இந்த FAU-G இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்