அஜித்தின் 'வீரம்' இந்தி ரீமேக் படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

அஜித், தமன்னா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'வீரம்' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்-சிவா கூட்டணியில் உருவான முதல் படமான இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரும் ரஜினியின் '2.0' படத்தின் வில்லனுமான அக்சயகுமார் இந்த படத்தில் அஜித் கேரக்டரில் நடிக்கின்றார். ஃபர்கத் சாம்ஜி இயக்கவுள்ள இந்த படத்தை சாஜித் நாதித்வாலா தயாரிக்கவுள்ளார். இவர் இயக்கவுள்ள அக்சயகுமாரின் ஒன்பதாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமன்னா கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
லேண்ட் ஆஃப் லுங்கி (Land of Lungi) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே 'ரவுடி ரத்தோர்' உள்பட ஒருசில தென்னிந்திய படங்களின் ரீமேக்கில் நடித்துள்ள அக்சயகுமாருக்கும் இந்த படமும் பாலிவுட்டில் வெற்றி பெற்று நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒரிஜினல் லைசென்ஸ் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி கருத்து

வாகனங்கள் ஓட்டுபவர்கள் இன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ரூ.500 அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது...

பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்தது என்ன? நடிகை மதுமிதா விளக்கம்

நகைச்சுவை நடிகை மதுமிதா, அவருடைய பக்கத்து வீட்டு பெண் ஒருவரை கடித்துவிட்டதாக நேற்று முதல் செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து நடிகை மதுமிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

திருமணத்திற்கு முன் உறவு நல்லது: இன்று வெளியாகியுள்ள படத்தின் ஹீரோ கருத்து

திருமணத்திற்கு முன் உறவு வைத்து கொள்வது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா என்பவர் திருமணத்திற்கு முன்பு உறவு கொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்...

புளூவேல் கேம்: தானாக முன்வந்து விசாரணையை தொடங்கிய ஐகோர்ட்

உலகையே ஆட்டிப்படைத்து வரும் புளுவேல் கேமினால் தற்கொலை செய்துவரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்...

வெளியானது விஷாலின் அடுத்த படத்தின் டிரைலர்

நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க பணிகள், தங்கையின் திருமணம் ஆகியவற்றின் பிசியிலும் விஷால் தற்போது 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மோகன்லால் நடித்து வரும் 'வில்லன்' என்ற மலையாள படத்தில் விஷால் முதல்முறையாக வில்லனாக நடித்து வருகிறார்...