2021இல் புது சாதனை படைத்த பாலிவுட் டிரெய்லர்… வைரலாகும் இந்திராகாந்தி கெட்டப்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ரசிகர்களின் பலத்த வரவேற்புடன் நடிகர் அக்சய்குமார் நடித்த “பெல்பாட்டம்” திரைப்படம் நேரடியாக திரையரங்கிற்கு வருகிறது. வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளிவர இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் டிரெய்லர் வெளியாகி வெறும் 24 மணிநேரத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று, பெல்பாட்டம் திரைப்படம் 2021இல் புது சாதனை படைத்து இருக்கிறது. கொரோனா காலத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை எதிர்ப்பார்த்து ஏமாந்துபோன ரசிகர்களுக்கு பெல்பாட்டம் திரைப்படம் பெரும் தீனியாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
கடந்த 1980 வாக்கில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ரஞ்சித் திவார் இயக்கி இருக்கிறார். இதில் பாலிவுட் பிரபல நடிகர் அக்சய் குமார், நடிகை ஹீமா குரோஷி, லாரா தத்தா, வாணி கபூர் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்தத் திரைப்படம் ஸ்பை த்ரில்லர் கதையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பெல்பாட்டம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இந்திராகாந்தி கேரக்டர் ரசிகர்களிடையே அதிகப் பாராட்டுகளை குவித்து வருகிறது. பெல்பாட்டம் திரைப்படத்தில் வரும் இந்திராகாந்தி கெட்டப்பில் நடிகை லாரா தத்தா நடித்திருக்கிறார்.
மறைந்த பிரதமர், இந்தியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட இந்திரா காந்தி கேரக்டருக்கு நடிகை லாரா தத்தா கணக்கச்சிதமாகப் பொருந்தி போகிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப்பட்டம் வென்ற நடிகை லாரா தத்தா தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “அரசாட்சி” திரைப்படத்தில் அறிமுகமானவர்.
தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments