அக்சய்குமார் படத்தை ரீமேக் செய்வாரா உதயநிதி?

  • IndiaGlitz, [Monday,July 18 2016]

பாலிவுட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் 'ஜாலி LLB. இந்த படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் 'மனிதன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். தொடர்ந்து காமெடி ஹீரோவாக நடித்து வந்த உதயநிதி முதன்முதலாக தனது சீரியஸ் நடிப்பையும் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்த இந்த படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வெற்றியை பெற்றது.
இந்நிலையில் 'ஜாலி LLB படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கவுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் மற்றும் ஹுமா குரோஷி இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திலும் கோர்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என்பது இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்தே தெரியவருகிறது.
தற்போது மூன்று படங்களில் பிசியாக உள்ள உதயநிதி, 'ஜாலி LLB' படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்ப்போம்.

More News

மோகன்லால் நடித்த தமிழ்ப்படத்தின் ரிலீஸ் தேதி

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது...

நதியாவை வில்லனுக்கு ஜோடியாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்

மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'வாஸ்கோடகாமா' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. ..

சூப்பர்ஸ்டாரின் அப்பா வேடத்தில் ரீ-எண்ட்ரி ஆகும் சரத்குமார்

கடந்த ஆண்டு சரத்குமார் இரு வேடங்களில் நடித்த 'சண்டமாருதம்' ஓரளவுக்கு சுமாரான வரவேற்பை பெற்றாலும் அதன் பின்னர் அவர்...

ஆயுதபூஜை ரேஸில் இணைந்த விஜய்சேதுபதி படம்

2016ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அன்று ஆயுதபூஜை விடுமுறை நாளில் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய 'ரெமோ'...

சமுத்திரக்கனியின் 'அப்பா' ரீமேக்கில் சூப்பர் ஸ்டார்?

கடந்த 1ஆம் தேதி வெளியான சமுத்திரக்கனியின் 'அப்பா' திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.