ரஜினிக்கும் மகேஷ்பாபுவுக்கும் ஒரே வில்லனா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த 'பிரமோத்சவம்' சமீபத்தில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மகேஷ்பாபு லண்டனில் ஓய்வு எடுத்து வருவதாகவும், அவர் இந்தியா திரும்பியவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பார் என தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அக்சய்குமார் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அக்சயகுமார் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' படத்தின் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதை மும்பையை அடிப்படையாக கொண்டது என்பதால் வில்லன் கேரக்டருக்கு அக்சயகுமார் சரியான தேர்வாக இருக்கும் என படக்குழுவினர் ஆலோசித்து வருவதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout