சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கருக்கு அக்சயகுமார் கூறிய காமெடி பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
எப்போது சண்டைக்கு வருகிறீர்கள் என அண்டர்டேக்கர் கேட்ட கேள்விக்கு நடிகர் அக்ஷய்குமார் காமெடியான பதில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் ’கில்லாடியோன் கா கில்லாடி’. இந்த படத்தில் அண்டர்டேக்கரை அக்ஷய்குமார் வீழ்த்துவது போன்ற காட்சியை இயக்குனர் உமேஷ் மெஹ்ரா வைத்திருப்பார். கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து அண்டர்டேக்கரை இதுவரை வீழ்த்தியவர்கள் யார் யா?ர் கையை தூக்குங்கள் என ஒரு மீம்ஸ் புகைப்படம் பதிவு செய்யப்பட்டு இருந்தது அதில் அண்டர்டேக்கரை வீழ்த்திய பிராக் லெஸ்னர், டிரிபிள் எச், ரோமன் ரெயின்ஸை ஆகியோர்களை தொடர்ந்து அக்ஷய் குமாரின் புகைப்படமும் இடம் பெற்றது
இந்த புகைப்படத்தை பார்த்த அண்டர்டேக்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’எப்போது நிஜமான சண்டைக்கு வரப் போகிறீர்கள் அக்ஷய்குமார்? என டுவிட்டரில் கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு காமெடியாக பதிலளித்த அக்ஷய் குமார் ’கொஞ்சம் பொறுங்கள் என் இன்சூரன்ஸ் கம்பெனியினர்களிடம் பேசிவிட்டு அதன்பிறகு சண்டைக்கு வருகிறேன்’ என்று காமெடியாக கூறியுள்ளார்
A hilarious note to mark 25 years to the release of #KhiladiyonKaKhiladi tomorrow!
— Akshay Kumar (@akshaykumar) June 13, 2021
A fun fact though: it was wrestler Brian Lee who played The Undertaker in the film ?? pic.twitter.com/w7J5z3QGBQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments