கொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி செய்த '2.0' நடிகர்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித குலத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்ள இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

இருப்பினும் மத்திய அரசு தற்போது பொருளாதார ரீதியில் பெரும் சவாலை எதிர்கொண்டு இருப்பதால் மத்திய அரசுக்கு உதவிடும் வகையில் மக்கள் தாராளமாக தங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என சற்றுமுன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் இந்த நிலையில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பிரபல பாலிவுட் நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான நடிகர் அக்ஷய்குமார் கொரோனாவை எதிர்கொள்ள ரூபாய் 25 கோடி நிதியுதவி அளித்து உள்ளார்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’இதுதான் சரியான தருணம். நாட்டு மக்கள் அனைவரும் நம்மால் முடிந்ததை இந்த நேரத்தில் உதவி செய்ய வேண்டும். என்னுடைய சேமிப்பில் இருந்து ரூபாய் 25 கோடியை பிரதமர் நிவாரண நிதியை அளிக்கிறேன் நாம் உயிர்களை காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்

More News

இவர்கள் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஏழை எளியவர்கள் வீட்டில் முடங்கி கிடப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடல்களை எவ்வாறு கையாள்வது???

கொரோனா வைரஸ் உலகிற்கே புதிய நோயாக இருப்பதால் வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்பவர்களை

கொரோனா வைரஸில் இருந்து முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகிபாபு

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை திரையுலகைச் சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ரூ.500 கோடி கொடுக்கும் டாடா!

உலகெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நிலையில் இந்த வைரஸிலிருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றன.

வெளிநாட்டுப் பயணிகளை சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே கொரோனா பரவலுக்கு காரணம்!!! ராஜீவ் கவுபே கருத்து!!!

வெளிநாடுகளில் இருந்துவந்த பயணிகளைச் சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை அதிகமாகியிருப்பதற்கு காரணம் என்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபே தெரிவித்துள்ளார்.