ரூ.25 கோடியை அடுத்து மீண்டும் பெரிய தொகையை நிதியுதவி செய்த அக்சய்குமார்
- IndiaGlitz, [Friday,April 10 2020]
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் கேட்டுக்கொண்டார் இதனை அடுத்து டாடா நிறுவனம் ரூ 1500 கோடி, ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி என கோடிக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் நிதி உதவி குவிந்தன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பாலிவுட் பிரபல நடிகரும் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான அக்சய்குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ 25 கோடி நிதி உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் மேலும் ரூ.3 கோடி மும்பை மாநகராட்சிக்கு நன்கொடை கொடுத்த தகவல் வெளிவந்துள்ளது
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரத்துறைக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்க உதவும் வகையில் மும்பை மாநகராட்சிக்கு அக்சய்குமார் 3 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அக்சய்குமார் மொத்தம் ரூ.28 கோடி நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.