1500 சினிமா கலைஞர்களின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3000 டெபாசிட் செய்த ரஜினி பட நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு இல்லாமல் இருப்பதால் சினிமா கலைஞர்கள் பலரும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கின்றதோ அதற்கு பின்னர்தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெரிய நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் முடிந்தவரை கஷ்டப்படும் சினிமா கலைஞர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் பல ஆயிரக்கணக்கான சினிமா கலைஞர்கள் பசியும் பட்டினியுமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த நிலையில் பாலிவுட்டை சேர்ந்த CINTAA என்ற சினிமா அமைப்பில் உள்ள 1500 சினிமா கலைஞர்களுக்கு தலா ரூபாய் 3000 வீதம் மொத்தம் 45 லட்ச ரூபாய் நடிகர் அக்ஷய் குமார் அவர்கள் நிதி உதவி செய்துள்ளார். இந்த பணத்தை அவர் அவர்களுடைய வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். இந்த நிதி உதவியால் 1500 சினிமா கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் பசி நீங்கியுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.
நடிகர் அக்ஷய்குமார் ஏற்கனவே மத்திய அரசின் பிரதமர் நிவாரண நிதிக்காக ரூபாய் 25 கோடி நிதியுதவி செய்துள்ளார் என்பதும் அதன் பின்னர் மும்பை மாநகராட்சிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க 3 கோடி ரூபாயை கொடுத்துள்ளார் என்பதும், மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு ரூ.2 கோடி ரூபாய் நிதி அளித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மேலும் 45 லட்ச ரூபாய் நிதி உதவி செய்ததற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments