8 வருடங்களுக்கு முன் பதிவு செய்த டுவிட்டை டெலிட் செய்த அக்சயகுமார்: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,June 23 2020]

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் எட்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்த டுவீட் ஒன்றை தற்போது டெலிட் செய்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அக்சயகுமார் தனது ட்விட்டரில் ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். அதில் ’தற்போது சைக்கிள்களை எடுத்து சுத்தம் செய்ய கூடிய நேரம் வந்துவிட்டது என்றும் ஏனெனில் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக ஏறி கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

எட்டு வருடங்களுக்கு முன் பெட்ரோல் விலை குறித்து அக்சயகுமார் பதிவு செய்த இந்த டுவிட் இன்றைய நிலைக்கு மிகச்சரியாக பொருந்துவதால் டிவிட்டர் பயனாளிகள் அந்த டுவிட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தற்போது வைரல் ஆக்கினார்கள். இதனை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்த அக்சயகுமார் எட்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்து அந்த ட்வீட்டை டெலிட் செய்துள்ளார்

தற்போது மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள அக்சயகுமார் தன்னுடைய பழைய டுவிட்டால் மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படலாம் என்பதால் அவர் அந்த டுவீட்டை டெலிட் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.