குடியுரிமை விவகாரம் குறித்து '2.0' பட நடிகர் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,May 03 2019]

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகரும் ரஜினியின் '2.0' படத்தின் வில்லன் நடிகருமான அக்சயகுமாரின் குடியுரிமை குறித்தும் ஒருசில கருத்துக்கள் வெளியாகியுள்ளது. அவர் கனடா நாட்டை சேர்ந்தவர் என்றும் அந்நாட்டின் குடியுரிமையை அவர் பெற்றுள்ளதாகவும் ஒருசில அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் அக்சயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

என்னுடைய குடியுரிமை பற்றி தேவையற்ற கருத்துக்கள் மற்றும் எதிர்மறை கருத்துக்களை பார்த்து புரியாமல் உள்ளேன். நான் கனடிய பாஸ்போர்ட் வைத்திருப்பதை மறைக்கவில்லை அல்லது மறுக்கவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் கனடாவிற்கு நான் சென்றதில்லை என்பதுதான் உண்மை்.

நான் இந்தியாவில் வேலை செய்கிறேன், இந்தியாவில் என் வரிகளை சரியாக செலுத்தி வருகிறேன். இந்தியாவுக்கு நான் தேசப்பற்றுடன் இருப்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

குடியுரிமை பிரச்சினை குறித்து தேவையற்ற சர்ச்சையில் என் பெயர் இழுக்கப்படுவதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். எனது தனிப்பட்ட, சட்ட, அரசியல் அல்லாத, மற்றவர்கள் விரும்பும் வகையில் எனது வழியில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய விரும்புகிறேன், இந்தியா மென்மேலும் வலுவடைவதையே நான் விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.