ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாகும் 2.0' நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,March 05 2019]

ராகவா லாரன்ஸ் இயக்கிய 'காஞ்சனா 3; திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் 'காஞ்சனா' திரைப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் 'காஞ்சனா' இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகரும் ரஜினியின் '2.0' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான அக்சயகுமார் நாயகனாக நடிக்கவுள்ளார். அதேபோல் இந்த படத்தில்பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இந்தியில் இயக்கவுள்ளார்.

அக்சயகுமார் மற்றும் கியாரா அத்வானி ஏற்கனவே தற்போது 'குட் நியூஸ்' என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் வெளியாகும் முன்னரே மீண்டும் இருவரும் ஜோடி சேருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

காஞ்சனா' இந்தி ரீமேக் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் 'காஞ்சனா 3' படத்தின் ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது