ஷங்கர் ஒரு இயக்குனரே இல்லை. '2.0' வில்லன் அக்சயகுமார்

  • IndiaGlitz, [Saturday,July 02 2016]

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தை இயக்கி வருகிறார். உலக தரத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார், 'ஷங்கரை ஒரு இயக்குனராக மட்டும் நாம் பார்க்க கூடாது. ஒவ்வொரு படத்திற்கு முன்பும் அந்த படம் எப்படி அமையவேண்டும் என்பதை அவர் மாதக்கணக்கில் ஒரு விஞ்ஞானியை போல ஆய்வு செய்கிறார். எனவே அவரை இயக்குனர் என்று கூறுவதை விட சயிண்டிஸ்ட் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் பெருமையாக தெரிவித்துள்ளார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து கூறியபோது, 'ரஜினிகாந்த் பிறக்கும்போதே ஸ்டைலுடன் பிறந்தவர். அவருடைய நிஜ வாழ்விலும் அவரது ஒவ்வொரு அசைவிலும் ஒரு ஸ்டைலை பார்க்கலாம். மேலும் ரஜினிகாந்த் மிக எளிமையான மற்றும் மனித நேயம் மிக்கவர்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
2017ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்சயகுமாருடன் எமிஜாக்சன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தென்னிந்திய நடிகர் சங்கம் குறித்து 'அம்மா' எடுத்த முக்கிய முடிவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்து பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது...

தள்ளி போகாதே' தாமதம் ஆக யார் காரணம்?

கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியின் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயோ' நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்து உருவாக்கியுள்ள படம் 'அச்சம் என்பது மடமையடா'...

சுந்தர் சி படத்தில் இணைந்த 'பாகுபலி 2' கலைஞர்கள்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது பிரமாண்டமான படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பதையும்...

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு தனுஷ் தரும் பரிசு.

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' திரைப்படம் கிட்டத்தட்ட ரிலீஸ் தேதியை அறிவிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான 'கொடி' என்ற அரசியல் படமும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

'கபாலி' விநியோகிஸ்தரிடம் கவர்னர் கொடுத்த உறுதிமொழி

திரையுலகினர்களுக்கு எத்தனையோ பிரச்சனை இருந்தாலும் தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது திருட்டு டிவிடி பிரச்சனை.