மொட்டை அடிக்கவும் தயார். அக்சரா ஹாசன் அதிரடி

  • IndiaGlitz, [Friday,March 10 2017]

கோலிவுட் திரையுலகில் தான் ஏற்று கொண்ட கேரக்டருக்காக மொட்டை அடிப்பது உள்பட எந்த வகையிலும் உருமாற தயங்காத ஒரு நடிகர் என்றால் அவர் உலக நாயகன் கமல்ஹாசன் ஒருவர்தான். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற சொல்லிற்கேற்ப கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேரக்டருக்காக மொட்டை அடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார்.

இதுவரை நான் மொட்டை அடித்து நடிக்கும் கேரக்டர்கள் எனக்கு கிடைக்கவில்லை. அப்படி ஒருவேளை கிடைத்தால் உடனே நானே கத்தரிக்கொலை எடுத்து எனது தலையை மொட்டை அடிக்க தயங்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

மொட்டை அடிப்பது தனக்கு ஒன்றும் புதிதில்லை என்றும் தான் ஏழு வயதாக இருந்தபோது ஷார்ட் ஹேர் வைத்திருந்ததாகவும், ஒருமுறை தந்தை கமல்ஹாசனிடம் மொட்டை அடித்தால் எனக்கு எப்படி இருக்கும் என்று கேட்டபோது உடனே என்னை குளியலறைக்கு அழைத்து சென்று அவரே மொட்டை அடித்துவிட்டதாகவும் தனது சி'றுவயது அனுபவத்தை அக்சரா ஹாசன் நினைவு கூர்ந்தார்.

எனவே அக்சரா ஹாசனை மொட்டை தலையுடன் விரைவில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.