காதில் சீக்ரெட் சொல்லி முத்தம் கொடுக்கும் அக்ஷராஹாசன்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,June 27 2022]

உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் காதில் சீக்ரெட் சொல்லி முத்தம் கொடுத்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

உலக நாயகன் கமல்ஹாஸனுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அக்ஷராஹாசன், தனுஷ் - அமிதாப் பச்சன் நடித்த ’ஷமிதாப்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் அஜித்தின் ’விவேகம்’ விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ உள்ளிட்ட ஒரு சில படங்கள் நடித்தார்.

கடந்த மார்ச் மாதம் இவர் நடித்த ’அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அக்ஷராஹாசனுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தனது செல்ல குட்டியின் காதில் ரகசியம் கூறி, அதற்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். ரகசியங்களை எப்போதும் நமக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் இது ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் நேரம் என்றும் கேப்ஷனாக அக்ஷராஹாசன் பதிவு செய்துள்ளார். இந்த படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.