'சபாஷ் நாயுடு' படத்தில் கமலின் இன்னொரு குடும்ப உறுப்பினர்

  • IndiaGlitz, [Friday,April 29 2016]
உலக நாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தின் தொடக்கவிழா இன்று காலை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசனும் பணிபுரியவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கவுள்ள நிலையில் அவருடைய உதவியாளராக அக்ஷராஹாசன் பணிபுரியவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அவருடைய தாயார் சரிகா நடித்துள்ள 'சொசைட்டி' உள்பட ஒருசில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம், சித்திக் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

More News

தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆகும் அரசியல் திரைப்படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியும், அதன் மூலம் கிடைத்த தேசிய விருதும் நடிகர் பாபிசிம்ஹாவை உச்சத்திற்கு கொண்டு போய் நிறுத்தியது...

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இலங்கை எம்.பி சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் 'கபாலி' படத்தின் டப்பிங்கை முடித்த நிலையில் தற்போது அவர் '2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஆயத்தமாகி வருகிறார்...

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தில் பிரபல மலையாள நடிகர்

கமல்ஹாசனின் அடுத்த படமான 'தூங்காவனம்' படத்தின் தொடக்கவிழா இன்று நடிகர் சங்கத்திற்கு சொந்தமான...

ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் நாயகி

இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் அறிமுகமான நடிகை ப்ரியங்கா சோப்ரா, அதன் பின்னர் எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும்...

இந்த தேர்தலில் கமல் ஓட்டு போட மாட்டாராம். ஏன் தெரியுமா?

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெறவேண்டும்...