கமல் மகளுக்கு கிடைத்த மாபெரும் விருது
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் தேசிய விருதுகள், பத்ம விருதுகள் மற்றும் பல விருதுகள் வாங்கி குவித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கேற்ப கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன், அறிமுகமான முதல் படத்திலேயே விருது பெற்றுள்ளார்.
Reliance Broadcast Network நிறுவனம் ஒவ்வொரு வருடமும் சிறந்த திரையுலக கலைஞர்களை தேர்வு செய்து BIG Star Entertainment Awards என்ற விருதினை வழங்கி வருகிறது. இந்நிலையில் இவ்வருடத்திற்கான இந்த விருது பெற்றவர்களின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.
இதில் 'ஷமிதாப்' படத்தில் அறிமுகமான அக்ஷராஹாசனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது கிடைத்துள்ளது. 'ஷமிதாப்' படத்தில் அக்ஷராஹாசன், அமிதாப் மற்றும் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'பிக்கு' என்ற பாலிவுட் படத்தில் நடித்த அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோனேவுக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com