அக்சராஹாசனின் துணிச்சலான முடிவு
- IndiaGlitz, [Thursday,March 30 2017]
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் என்பது நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் இதுகுறித்து போதனை செய்யும் திரைப்படம் ஒன்று பாலிவுட்டில் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தின் துணிச்சலான கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கி வந்த நிலையில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் இந்த சவாலான கேரக்டரை ஒப்புக்கொண்டு நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆகிறது.
'லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த படத்தை மனிஷ் ஹரிசங்கர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் முக்கிய வேடத்தை ஏற்று நடித்த அக்சராஹாசனுக்கு அவர் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, 'இளம் வயதில் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகும் பெண்ணாக நடிக்க ஒப்புக் கொண்ட அக்ஷரா ஹாஸனுக்கு ஹாட்ஸ் ஆஃப். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க எந்த நடிகையுமே தயங்கியிருப்பார்' என ஹரிசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் அக்சராஹாசன் தற்போது அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.