லிங்குசாமியின் அடுத்த படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!

  • IndiaGlitz, [Saturday,July 31 2021]

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்திநேனி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஆதி வில்லனாக நடித்து வருகிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தில் அஜீத் நடித்த ’ஆரம்பம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை அக்ஷரா கவுடா இணைந்துள்ளார். இவர் ஆதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆதி இந்த படத்தில் வில்லனாக நடித்தாலும் அவருக்கும் இந்த படத்தில் ரொமாண்டிக் காட்சிகள் இருப்பதாகவும் ஆதி மற்றும் அக்ஷரா கவுடா ரொமான்ஸ் காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஆதி மற்றும் அக்ஷரா கவுடா ஆகிய இருவரும் மதுரை தமிழ் மற்றும் கடப்பா தெலுங்கு மொழி பேசும் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

More News

5 மொழிகளில் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: இன்னொரு ஹீரோவும் இணைகிறார்.

ஐந்து மொழிகளில் தயாராக உள்ள விஜய்சேதுபதியின் படத்தில் இன்னொரு ஹீரோவும் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

மகனை பார்த்து பெருமைப்படும் அருண்விஜய்: வைரல் புகைப்படம்!

சூர்யா தயாரித்து வரும் திரைப்படம் ஒன்றில் அருண் விஜய் மகன் அர்னவ் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ஆபாச பேச்சில் 50-ஐ வீழ்த்திய 25...! சபலத்தால் வந்த வினை… கம்பி எண்ணும் நிலை…!

பேஸ்புக்கில் காதல் வலை வீசியும், வாட்ஸ் அப்பில் ஆபாச சேட் செய்தும், 50 வயதுடைய தொழிலதிபரிடம் பல லட்சங்களை கறந்துள்ளார் ஜனனி. இதனால் அந்தப்பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய பிரதமரே எச்சரிக்கும் “கோஸ்ட் மிளகாய்”… அப்படியென்ன ஸ்பெஷல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு மிளகாய் வெரைட்டி

'ஆர்.ஆர்.ஆர்' படத்தை அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த அனிருத்!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளார்