ஒரே நாளில் எலிமினேட் ஆன அக்சரா-வருணுக்கு அடித்தது அதிர்ஷ்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே நாளில் எலிமினேட் ஆன வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவருக்கும் அதிர்ஷ்டம் அடித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் அக்சரா மற்றும் வருண் ஆகிய இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள் என்பதும் குறிப்பாக அவர்கள் டாஸ்க்கில் முழு ஈடுபாட்டை செலுத்தினார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த வாரம் வருண், அக்சரா ஆகிய இருவரும் ஒரே நாளில் எலிமினேட் செய்யப்பட்டது பிக்பாஸ் பார்வையாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்க் சரியாக விளையாடாமல் வெறும் சண்டை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கும் பலர் வீட்டில் இருக்கும் போது நன்றாக டாஸ்க் விளையாடியவர்கள் வெளியேற்றப்படுவதா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலுமினேட் செய்யப்பட்ட அக்சரா, வருண் ஆகிய இருவரும் ஒரு சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் தற்போது இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் வருண், அக்சரா படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருண் மற்றும் அக்சரா நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com