தீபிகா படுகோன் படத்திற்கு ஒரு தியேட்டரையே புக் செய்த முன்னாள் முதல்வர்!

  • IndiaGlitz, [Friday,January 10 2020]

ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக தீபிகா படுகோனேவின் ‘சப்பக்’ என்ற திரைப்படத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்தும், டிக்கெட்டுக்களை கிழித்தும் வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் தீபிகாவின் இந்த செயலுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய பிரதேசம் மற்றும் புதுவை உள்பட ஒரு சில மாநிலங்கள் இந்த படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், தீபிகாவின் ’சப்பக்’ திரைப்படத்திற்காக ஒரு தியேட்டரின் அனைத்து டிக்கெட்டுக்களையும் முன் பதிவு செய்துள்ளார். இன்று அந்த திரைப்படம் வெளியாகும்போது அவர் தனது கட்சித் தொண்டர்களுடன் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.என்.யூ கல்லூரி மாணவர்களுக்கு தீபிகா ஆதரவு அளித்தததை ஒரு குறிப்பிட்ட கட்சி பெரிது படுத்தியதால் இந்த படத்திற்கு அதிகபட்ச இலவச விளம்பரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மருமகளின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மாமியாருக்கு நேர்ந்த கொடுமை!

https://tamil.news18.com/news/national/woman-killed-her-mother-in-law-with-snakebite-for-objecting-to-her-extramarital-affair-san-242381.html

ஐயா.. தமிழ் இயக்குனர்களே, இனிமேல் இப்படி பண்ணாதீங்க.. ட்வீட் போட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி..!

தமிழ் இயக்குனர்களே இனிமேல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பின்னனியுடைய படங்களை எடுக்காதீர்கள் என தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபிகாவை அடுத்து சன்னிலியோனுக்கு ஆதரவு குவியுமா?

சமீபத்தில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நேரில் சென்று ஆதரவு அளித்தார்.

சந்தானம் நடித்த 'டகால்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்கள் அவருக்கு கடந்த ஆண்டு வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

போரே வந்தாலும் பாகிஸ்தான் கலந்து கொள்ளாது.. கடந்த கால தவறுகளை சரிசெய்து கொள்கிறோம்..!

இரான் மற்றும் சவுதி அரேபியாவின் நட்புறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்யும். அமெரிக்கா மற்றும் இரான் இடையே உள்ள வேறுபாடுகளைத் தவிர்க்க, பாகிஸ்தான் உதவி செய்யவும் தயாராக உள்ளது.