close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் சூர்யா வில்லன்

Tuesday, July 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என்பதை பார்த்தோம். விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 18வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கிய 'அயன்' படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக அட்டகாசமாக நடித்த ஆகாஷ்தீப் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார்.
நேற்றைய முதல்நாள் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை எனினும் விரைவில் அவர் படக்குழுவினர்களுடன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷ்தீப் பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment