ஏகே நடிப்பில் பிரபுசாலமன் இயக்கும் படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஏகே நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
‘மைனா’ ’கும்கி’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபுசாலமன் தற்போது ’செம்பி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி; நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஏகே என்ற அஸ்வின்குமார் லட்சுமிகாந்தன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது.
டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். ஜீவன் ஒளிப்பதிவில் புவன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் அஸ்வினுக்கு திருப்புமுனையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இறைவனுக்கு நன்றி மற்றும் என் மக்களுக்கு நன்றி ????????
— Ashwin Kumar Lakshmikanthan (@i_amak) May 20, 2022
Sembi - The Moments #AK #Βασιλιάς #believer ✨ pic.twitter.com/jYbYwIuCmP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments