'ஏகே 61': அஜித்தின் கேரக்டரை கசியவிட்ட ஸ்டண்ட்மேன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்து வரும் 61வது திரைப்படமான ’ஏகே 61’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக சென்னை அண்ணா சாலை போன்று போடப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த பணம் மணி ஹெய்ஸ்ட்’ போல் வங்கி கொள்ளை கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது
மேலும் இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் அவரே ஹீரோ அவரை வில்லன் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை
இந்த நிலையில் அஜீத்துடன் இந்த படத்தில் பணிபுரியும் சண்டை கலைஞர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது. இதில் ஒரு ஸ்டண்ட்மேன், அஜீத் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக கூறி இருக்கிறார். இதனை அடுத்து அஜீத்தின் ஒரு கேரக்டர் வில்லன் என்பது தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout