அஜித்தின் உடல்நிலை குறித்த ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Saturday,March 09 2024]

நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை குறித்த மகிழ்ச்சிக்குரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஆரம்பகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் அன்று இரவே அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் அஜித்துக்கு மூளையில் கட்டி மற்றும் அறுவை சிகிச்சை என்பதெல்லாம் தவறான தகவல் என்றும் அவரது காதுக்கு கீழே ஒரு சிறிய வீக்கம் இருந்தது, அதற்காக மட்டும் சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பியதாகவும் அவர் தற்போது முழுமையாக குணமாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அஜித்துக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.