குழந்தை பெற்றுக்கொள்ள எதற்கு திருமணம் செய்ய வேண்டும்? அஜித் பட நடிகை கேள்வி!

  • IndiaGlitz, [Tuesday,September 06 2022]

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அஜித் படத்தில் நடித்த நடிகை ஒருவர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் ’காதல் தேசம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் மணிரத்னம் இயக்கிய ’இருவர்’ அர்ஜுன் நடித்த ’தாயின் மணிக்கொடி’ அஜித் நடித்த ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஜோதிகா நடித்த ’சினேகிதியே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் தெலுங்கு ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தபு 50 வயதுக்கு மேலாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் குழந்தை பிறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘மற்ற பெண்களை போல எனக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தான். ஆனால் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்றும், திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும், கூறியுள்ளார்.

மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால் வயது ஒரு தடை இல்லை என்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் என்னைப் பொறுத்தவரை குழந்தை பெற்றுக்கொள்வதற்கு திருமணம் அவசியமில்லாத ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.