close
Choose your channels

அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் குறித்த தகவல்

Friday, August 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தை வரும் பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க ஒருசில முன்னணி நிறுவன்ங்கள் தயாராக இருக்கும் நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஸ்ரீதேவி மறைவிற்கு முன்பே அஜித் மற்றும் ஸ்ரீதேவி குடும்பங்கள் நெருக்கமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜித்தின் படத்தை போனிகபூர் தயாரித்தால் இந்த நெருக்கம் இன்னும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் அஜித்-போனிகபூர் இணையும் படத்தின் இயக்குனர் யார் என்பதை அறிந்து கொள்ளவும் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment